+++காதல் மிட்டாய்+++

தேடலுக்கு
அர்த்தம் உன்னிடமே
நான் கேட்பேனா
எனது தேடலே
நீதானடி............!

காற்றிலும்
வேகமாக
செல்கிறேன் உன்னை
காண - எனது
அன்பினை உன்னிடம்
சொல்வதற்கு............!

கடிதம் எழுத
நான் வரவில்லை
கண்ணே
உன்னை எழுதவே
நான் தொடர்ந்தேன்
எழுத்தாக...........!

எனது கதையை
நீ திரையிடுகிராய்
திரைக்கு பின்னால் நான்
ஏங்குகிறேன்
உனைக்கான...............!

கோபித்தது
போதும் என்னுடன் வா
மெரினாவிற்கு
செல்லலாம்..............!

அங்கே
உனக்கு சுண்டலும்
வாங்கி தருகிறேன்........!

கொஞ்சம்
காதல் மிட்டாயும்
வாங்கித்தருகிறேன்........!

எழுதியவர் : லெத்தீப் (17-Apr-14, 12:00 pm)
பார்வை : 116

மேலே