தீ வைத்த தேவதை
பேசாதே
என்று
நீ பேசினாய்.
ஊமையாவது
சுகம் என்றேன்....
ஊமையாகி
மௌனித்தாய்.
தனியாக
பேச்சுக்கள் தின்றேன்.....
தனிமை தேசம்
சுவர் உடையவில்லை.
கொண்ட சித்திரம்
கரைவது கண்டேன்....
உறைந்து நின்ற
பனி மலர்.
தீண்டி தவழும்
சிறு தென்றல் கொன்றேன்.....
தேவதைகள்
நீ ஆகி
தேன் குடிக்கும்
தீவிரத்தில்
தீ வைத்து சாம்பலாகும்
பெருங்காடாய்
நான் நின்றேன்....