பிரிவின் வாசல்கள்
சாலைகளில் வரும்
பிரிவுகளைப்போல
வாழ்க்கையிலும் பல பிரிவுகள்..
முதல்முறை
பள்ளி செல்லும்போது
என்னோடு விளையாடிய
பொம்மைகளோடு பிரிவு...
கல்லூரிவிடுதி செல்லும்போது
தந்தையின்
வியர்வைதுளியோடு ...பிரிவு
வேலைநிமிர்த்தமாய்
வெளியூர் செல்லும்போது
தாய்க்கண்ணீரோடு
தள்ளாடிய பிரிவு ...
நெருங்கிய நண்பனை
பிரியமுடியாமல்
தொண்டைக்குழிக்குள்
துடிதுடித்த நீண்டநட்பின் பிரிவு ..
பிரிவு பட்டு பட்டு
துருப்பிடித்த இதயத்திற்கு ..
பிரிவற்ற உயிராய்
வந்தாள் ஒரு பூமகள்
அவள் பெயர் மனைவி ...
பிரிவுநீர் கண்களில்
முளைக்கும் போதெல்லாம்
அணை போடும் முதல் கை
அவள் நம்பிக்கை...
அவளுக்காய் க நிலவன்