+மழையாய் பொழியும் ஞாபகங்கள்+

மழையாய் பொழியும் ஞாபகங்கள்!
மனதை தழுவும் ஞாபகங்கள்!
இதழில் சிரிப்பை தந்துமெல்ல‌
இமையை நனைக்கும் ஞாபகங்கள்!

உறங்கும் வேளை ஆழ்மனதில்
கனவாய் உலவும் ஞாபகங்கள்!
உறக்க மிழந்து தவிக்கும்வேளை
ஆறுதல் கொடுக்கும் ஞாபகங்கள்!

சின்ன வயது ஞாபகங்கள்!
சிலிர்ப்பை கொடுக்கும் ஞாபகங்கள்!
எத்தனை வயது கடந்தபோதும்
எட்டிப் பார்க்கும் ஞாபகங்கள்!

எட்டிபோல வாழ்க்கை கசந்தால்
தேனாய் மாற்றும் ஞாபகங்கள்!
எந்ததேசத்தை சுவிகரித்தாலும் விடா
சொந்த தேசத்தின் ஞாபகங்கள்!

நம்ம ஊரின் ஞாபகங்கள்!
நம்மில் ஊறும் ஞாபகங்கள்!
நம்மால் சிலரின் வாழ்வில்கிடைத்தால்
நன்றே இந்த ஞாபகங்கள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Apr-14, 7:33 am)
பார்வை : 649

மேலே