தன்னையே தேடுகிறான்

கார்முகில் கட்டவிழ்த்து விடும் மழை சோவென்று கொட்ட மக்கள் மறைவு தேடி விரைந்து, ஈரம் சொட்ட சொட்ட சிதறினர் . அனால் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறை கட்டிடம் பலர் ஒதுங்கும் அளவில் வடிவமைக்க படவில்லை . ஒரு அமானுஷ்ய சக்தி போல இருட்டு , சில குழல் விளக்குகளின் வெளிச்சம் , மழை நீர் திவலைகள் , வெளிவாயில் அருகே டீ கடை அடுப்பு எழுப்பும் ஆவி புகை , வாகனங்களின் விளக்கு உமிழும் வெள்ளிச்சம். ஒரு பக்கம் பார்த்தால் உண்மை சோகத்தில் நெஞ்சு வெடிக்க மயங்கி விழும் சொந்த காரர்கள் , மறு பக்கம் கடமைக்கு கூடிய நபர்கள் , வேறுபக்கம் மதுவையும் தண்ணீரையும் கலந்து கவலை களைவதாக கூறிகொள்ளும் கூடம் . விசாரித்ததில் பகுதி பழைய கவுன்சிலர் விபத்தில் சிக்கி இறந்ததாக டீ கடையில் சொன்னார்கள் .
....தொடரும்

எழுதியவர் : கார்முகில் (21-Apr-14, 4:45 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 76

மேலே