மனிதனை நாற்றாய் நடவேண்டும்

இட்லி சுட்டா என் ஆத்தா
சட்டினி வச்சு தரட்டா...
காடு கரையை விதைச்சு
கம்பு வரகு தெளிச்சு
கம்மகூல குடிச்சு
கலப்பை தூக்கி நடந்தா
கருப்ப சாமீ போல
இருந்தவங்க முன்னே !!

நெல்லுசோறு வடிச்சி
கஞ்சி தண்ணி இறைச்சி
சுடச் சுடத் தின்னும்
சத்தில்லாம நிக்கா எம்மக்கா...!!

புத்தக பை சுமக்க முடியா
வியர்வையில நனைஞ்சு
வைக்க போற போல
தொப்பை பெருகி நிக்கா
கோதுமை கூட மைதா
விதவிதமா செஞ்சு
கொழுப்பை சேர்த்து சேர்த்து
வயசும் குறைஞ்சு போச்சு...!!

திணை கம்பு சோளம்
வரகு வாற்கோதுமை அறியா !
எள்ளு கடலை தேங்காய்
ஆமணக்கு ஏதும் அறியா!!
சூரியகாந்தியில பொரிச்சு
சுருண்டு படுத்து கிடக்கும் எம்மக்கா !!

முன்ன செஞ்ச பாவமோ
மூததையரின் தவறோ !!
என்ன சொல்ல நானும்
இதயம் கூட வலிக்கும்...

சத்துள்ள பொருளையெல்லாம்
வித்து தின்னு செழிக்கும் !
வித்தகனோ நாமும்
வெயிலுபடாம வளர்த்தோம் !
பிள்ளை வாழ்கையை
செழிப்பாகுவதாய்
நோயில விழ வச்சோம் !

சோறுபோட்ட பூமியை
கூருபோட்டு வித்தோம்!
பாடுபட ஆளில்லையினு சாக்கும்
சொல்லி தொலைச்சோம் !
பட்டணம் தான் வாழ்கைன்னு
பெட்டி பாம்பாய் சுருண்டோம் !!

குடிக்கக் கூட தண்ணியின்றி
கனிம நீரை தான் பருகினோம்
சுத்தம் சுத்தம் சுத்தமென்று
கோஷம் மட்டும் போட்டு
வீட்டை சுற்றி கூவத்தை ஓடவிட்டு
கொசு கடியில் தூக்கமின்றி கிடப்போம் !!

மரத்தை வெட்டி மழையை மரிச்சாச்சு!!
மண்ணை வித்து மாளிகை எழுப்பி
மனுஷன் திங்கும் மருந்தும்
மருந்து தின்னும் மனுசனாச்சு
மாறி மாறி பிறந்தாச்சு !
மனுஷனைத்தான் தொலைச்சாச்சு !!

எழுதியவர் : கனகரத்தினம் (22-Apr-14, 12:16 am)
பார்வை : 126

மேலே