+இடைவள்ளல் கண்டதுண்டோ+
![](https://eluthu.com/images/loading.gif)
பாரி
நள்ளி
எழினி
ஓரி
பேகன்
மலையன்
ஆய்
பேரெடுத்தனர்
கடைவள்ளல்...!
ஆனால்
நீயோ
எனக்கோர்
இடைவள்ளல்..!
நீ
இல்லாத இடையைக்கொண்டு
சிந்தாமல் சிதராமல்
அள்ள அள்ளத் தருகிறாய்
கவிதைகள் கணக்கின்றி
சிணுங்காமல் பிணக்கின்றி
என்னைப் பொறுத்தவரை
உனக்கு
என்ன பட்டம் கொடுத்தாலும் தகும்..
நீ எனக்கு
இடைவள்ளலாகவே இருந்துவிடு
இனிக்கும் பல கவி தந்துவிடு