பார்வை யாசகம்

உனக்கும் எனக்குமான இந்த
முடிச்சைப் போட்டது யார்
என் உயிரை உன் உயிரோடு
கலந்துவிட்டது நீயா நானா ?
நானா வேண்டினேன் நீ வேண்டுமென்று ?!

எப்போதோ ஓர் ஜென்மத்தில்
எங்கோ ஓர் மூலையில்
என் ஜீவன் உன் ஜீவனைத்
தேடி இளைத்தாதா?
பதிலாய்
இப்போது எனக்குள் நீ வந்தாயா!

நீ வந்ததால்
போனால் வராத
உயிர்க்காட்டில்
ஊசலாடும்
சிறகிழந்த சிறுபறவையென
நெஞ்சக் கூட்டில் உன் நினைவோடு
ஊசலாடும் என்
உயிர்ப் பறவை

ஒருதுளி மழைக்காக
ஓயாது அண்ணாந்திருக்கும்
சாதகப் பறவை
உன் விழியோரப்
பார்வைத் துளிக்காக ஏங்கி
என் உயிர்க் காட்டில்
மல்லாந்து யாசித்திருக்கிறேன்
நானும்தான் !

எழுதியவர் : நேத்ரா (22-Apr-14, 6:33 am)
பார்வை : 157

மேலே