உப்புசம் புழுக்கம்
மூளை என்னைச்
சலவை செய்கிறது
முன்னேறு
ஏறு,ஏறு. . .
இதயம் என்னிடம்
இதமாய்ச் சொல்கிறது
இன்றோடிரு
இரு,இரு. . .
மூளைமடிப்பிற்கும்
இதயத்துடிப்பிற்கும்
இடையில்
உப்புசம்!!!
இடைவிடாமல்
இயங்கியபடியே
இருக்கிறேன்
உப்புசங்களோடு!!?