வாழ்ந்து பார்
ஏழைக்கு ஏது
வாழ்க்கை..... என்று
ஏளனம் செய்தோர்
எல்லாம்.....இன்று
திருப்பம்
கொண்டு......திரும்பி
என்னைப்
பார்ப்பதேன்...?
ஏழைக்குடும்பத்துப்
பிள்ளை இவன்
கோழை என்று
குற்றம் சொன்ன
சுற்றம் எல்லாம்
எந்தன்
வாசல் முற்றம்
வந்து
செல்வதேனோ.....??
வாழ்க்கை
மாற்றத்திற்கு
உரியது.... வெறும்
வாய் வார்த்தைகள்
ஏமாற்றத்திற்கு
சொந்தமானது.....!!
அடுத்தவனை
வாழ்த்தி வாழப்பார்....
அடுத்தவனை
வீழ்த்தி அல்ல.....!!
வசந்தம்
வீசும்
வையம் அதில்
வாழும் உனக்கு
ஐயம் எதற்கு....?
வாழ்க்கை உன்
வசம்.....வாழ்ந்து
பார் என்றும்
வீசும் வாசம்
உன் சுவாசம்
கலந்து.....!!