சிந்தனைக்கு
சிந்திக்க வேண்டுமே -நாம்
சிறக்க வேண்டுமே
புத்தம் புதிய விடயம் இல்லை
நாம்
புதுமை காணவுமில்லை
சுற்றி திரியும் இவர்கள் யாரோ
அறிவொளி வீசும் நம்
மண்ணில்
எதற்கு வேண்டாத வேலை
பள்ளிகூட படிப்பை
பாதியிலே விட்டு விட
பார்ப்பதற்கு யாரும்மில்லை
பல அறிவுரை பேசும் நாம்
கண்டும் காணதவர் போல்
கல்வியை இடை நடுவேவிட்ட
நாளைய தலைவர்களை
வீட்டு வேலைக்கு என்று
வியாபாரம் பேசி
வெட்டவும், கட்டவும் ,கழுவவும் ,
இன்னும் பல .......
ஏழை சிறுவர்கள்
கல்வியை உயர்த்தவே
பல நிறுவனங்கள்
இன்னும் பலன் இல்லை
இவர்கள் வாழ்கையில் .
ஏன் பொறுமை
பொங்கி எழுவோம்
சிறுவர் கல்வியை
உயர்த்திடுவோம்