உனக்கு எழுதும் கவிதைகள்
[பகுதி 7]
உன்னுடன்
பேசவே மாட்டேன் என்று
சொல்லிக் கொண்டே
இருக்கிறாய்
அடிக்கடி
என்னை அழைத்து !
[24]
*********
எங்கிருந்தோ வந்த
வண்ணத்துப் பூச்சிகளும்
தேனீக்களும்
என் வீட்டு வாசலில்
வட்டமிடக் காரணம்
என்னவென்று
எல்லோரும்
அதிசயிக்கின்றனர்
மலர்த்தோட்டம்
நீ
என் வீட்டிற்கு
வருகை புரிந்தது
புரியாமல் !
[25]
*********
உன் பார்வை
படும் என்பதற்காக
உன் வீட்டு வாசலில்
கனவுகளை
புள்ளிகளாய்
சிதற விட்டிருந்தேன்
விடியலில்
விழித்துப் பார்த்தேன்
காதல் கோடுகளால்
என்னை
கைது செய்திருந்தாய்
வண்ணக் கோலமானது
வாழ்க்கை !
[26]
********
மெய்யாலுமே
மெய்யாலுமே
எனக்கு அதிசயம்தானடி
நீ
பார்க்கும்
எந்தப் பொருளும்
எனக்கு !
[27]
***********
[கவிதைகள் தொடரும்...]