அம்மா கோச்சிண்டுட்டா

கலகலவென்று
கணீர் குரலில் கலக்கும்
கல்யாணி அம்மா !

கடும் சொற்கள்
காதில் விழுந்தாலும்
கண்டும் காணாமல்
போகும் அம்மா 1

இல்லத்தில் எத்தனை
இம்சைகள் என்றாலும்
இனிய புன்னகையை ஏந்தும் அம்மா !

உனக்கு கோபமே வராதா ?
உனக்கு உணர்ச்சிகளே இல்லையா ?
உன்னால் எப்படி சிரிக்க முடிகின்றது ?

கேள்விகளுக்கு பதில்===== சிரிப்பு

சிரிப்பு பழக்க தோஷம்
தோஷம் போக சிரிப்பு என
சிரிக்க வைத்தாள்
சிந்திக்கவும் வைத்தாள்

தோஷம் எனக்கும்
தோஷமனதால்
அலுவலகத்தின்
அல்லலை மறைக்க

அம்மா! அம்மா !
நீ எங்க அம்மா !
உன்னை விட்டா எனக்கு யாரு அம்மா?
என்ற பாடலை
முனு முணுத்து கொண்டே
உள்ளே நுழைகையில்

தங்கை அபிராமியின் குரல்
அண்ணா !
அம்மா கோச்சிண்டுட்டா...
சிரிக்க மாட்டேங்கிறா ...

என்ன அம்மா கோச்சிண்டுட்டாளா ?
என்ன ஆச்சு அம்மாவிற்கு? .

உள்ளே சென்று பார்க்கையில்
அம்மாவின் கால்களின் விரல்கள்
இரண்டும் கட்டப் பட்டு இருந்தது !!!!!!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (27-Apr-14, 10:09 pm)
பார்வை : 62

மேலே