மௌன யுத்தம்
வியர்வையில் குளித்து
உன் மார்பினில்
துடைக்கையில்
வழிந்தோடியது காதல்
சித்தம் புகுந்து
சிலாகித்து போனது காமம்
வார்த்தை
தேவையில்லை
மௌன யுத்தம் ஆரம்பம்
யுத்ததின்
குறியிடாய் சில
நகக் கீறல்கள்
வெற்றி தோல்வி நிர்ணயிக்காது
தொடரும் யுத்தம்....
அதனால் காயப்பட்டு கிடக்கின்றன - நம்
கட்டிலும்
தலையணைகள்.....
பாண்டிய இளவல் (மது. க)