இதன் தலைப்பு நீங்கள்தான்

அன்பெனும் வாசலில்
அடிமைகள் ஆயிரம்
பண்பெனும் பக்குவத்தால்
விளைச்சல்கள் கோடி

கைகோத்துப் பார்
உள்ளம் என்னும் முகம் தெரியும்
சிரித்துப் பார்
நாட்கள் என்னும் அழகு புரியும்

பார்வைகள் அதிகம்
அது காதலுக்கு உண்டு
சோகங்களும் அதிகம்
அதை பிரிந்தவர்களுக்கு உண்டு

சிலருக்கு சிலர் மீது கோபம்
பலருக்கு அவர்கள் மீதே கோபம்

நட்பெனும் பாதையில்
நண்பர்கள் மாறலாம்
அவர்கள் செய்த நன்றிகள் மறந்திட வேண்டாம்

தோல்விகள் ,வெற்றிகள்
எல்லாம் மனிதர்களுக்குத்தான்
அதை தெரிந்து கொள்ளாதவர்கள்தான்
நீ ,நான் என்று சொல்பவர்கள்

கண்களின் வழியாகத்தான்
எல்லோருடைய கண்ணீரும்
அவை வருகின்ற நாட்களில்தான்
நம்மை தெரிந்து கொள்கிறோம்
மற்றவர்களையும் புரிந்துகொள்கிறோம்

வாழ்க்கை புனிதமானது
அதை பணம் ,பதவிக்காகவும் மட்டும்
முடிச்சி போட நினைக்காதே
முடிச்சி போட நினைத்தவர்கள்
பல பேர்
முடிச்சியை அவுக்க தெரியாமல்
தன்னையே விற்று
தன்னையும் மறந்து
போதை என்னும் உருவத்தால்
இந்த உலகில் வெறும் நடைபிணமாக
வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்

எல்லோருக்கும் ஒருவித
திறமை இருக்கும்
அது பிறபித்த கடவளுக்கும் தெரியும்
உன்னை வளர்த்த தாயுக்கும் தெரியும்
தெரிந்து கொள்ளாதவன் நீதான் ......,

எழுதியவர் : காந்தி. (1-May-14, 5:21 pm)
பார்வை : 111

மேலே