இதயத்தில் உதயமாகி இதழில் கசியும் உயிரே
இருமனம் இணைந்து
நறுமணம் வீசும்
இதயத்தில் இன்பம்
உதயமாகும் கடைக்கண் பார்வையாலே
காத்திருப்பு இருவர்க்கும்
பெருந்தவிப்பு
படபடப்பு இதயத் துடிப்பு
இதன் பெயர் காதலோ
பட்டாம் பூச்சியாய் மனம்
வான் உயரப் பறக்கும்
இல்லாததெல்லாம்
இருப்பதாய் நினைக்கும்
அவள்பின் செல்லத் துடிக்கும்
அவள்முன் சொல்லத் தவிக்கும்
காணாத போது கவிதையாகும்
கண்முன் வந்தால் மௌனமாகும்
மெலியோனை வலியோனாய்
பரட்டையை அழகனாய்
முன்பின் அணியாத ஆடையை
தேடித் தேடி அணியத் தூண்டும்
ஆறுதாலாய் பேசுவோரை நண்பனாக்கும்
எதிராய் பேசுவோரை எதிரியாக்கும்
பொய்மெய்யை பேசிப் பேசி காதலை வளர்க்கும்
பொய் காதல் கூட கவிஞனாக்கும்
எதிர்மறையாய் செல்லாத காதல்
இலைமறையாய் செழிக்கும்
நேரிடை வாதம் நெஞ்சில் பிறக்கும் போது
தன் வழி தவறி பயணித்து நெஞ்சை பிளக்கும்
இல்லாத சுரத்துக்கு
காதலே மருந்தாகும்
மறந்திட நினைக்கையில்
காதலே முள்ளாகும்