ஏமாளிப் போராளி

ஏமாளிப் போராளி

நானொரு தொழிலாளி
நலந்தரப் பொறுப்பாளி
நானிலம் சீருயர‌
நனைந்திடும் பணியாளி !

பேச்சில் ஊக்குவிக்கப்
பெரியோ ர‌ருகுண்டு
பெரும்பே ர‌துபோதும்
பெறுங்கணக் கேனிங்கு.

பகலாய் இரவாகும்
பணியின் தரமுயர
பாராட் டுப்போதும்
பலநாள் பணியுயர‌.

நால்வர் குடியுயர‌
நானோ கடனாளி
நா நயம் நிசமென்னும்
நாணயப் பாட்டளி !

வார்த்தை வாழ்த்துக்களால்
வளங்கள் உயருமென‌
வர்த்தக உலகியலில்
வாழ்கைப் போராளி !

.....மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (2-May-14, 5:20 am)
பார்வை : 137

மேலே