கருத்திலே பூத்தது-காண்க -கலை 191839

கருத்திலே பூத்தது-காண்க -கலை 191839

செய்யவழி ஏனில்லை?
சேர்ந்துழைக்க மனமில்லை!
சீக்கிரமே வாக்களிக்க வா!

உய்யவழி ஏனில்லை?
உயரவழி பொத்தானில்!
ஓடி,நீ வாக்களைக்க வா!

சீலைகள் கிழித்தாலும்
செய்வது தாவணி;கட்சிச்
சீலையில்லை வாக்களிக்கச் சேர்!

வேலைசெய்தும்
எலிக்கறியை
ஏன்தின்பாய்?
ஏழைதான்;
கோழையில்லை எழு!

பட்டங்கள் வெளி நாடு
பறப்பதற்கோ?
திட்டங்கள் கூட்டணித்
திருட்டிற்கோ?
சட்டங்கள் உனைச்சுவற்றில்
அறைவதற்கோ?
எட்டி,உதை
கதவுகளை இடித்துவிடு!

சாதிக்கக் கூடிடுவாய்!
சாதிக்கக் கூடாயோ?
சோதிக்க எலியாவாய்!
சோதியென மாட்டாயோ?

வறுமைக் கோமணத்தில்
வாழ்க்கை ஊசலாடும்!
பொறுமை உனக்கெதற்கு
பொங்கியெழு! எதையிழப்பாய்?
அம்மணமாய் ஆவதின்முன்
அதிலவரைத் தூக்கிலிடு!
============ =========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (2-May-14, 1:06 pm)
பார்வை : 68

மேலே