கருத்திலே பூத்தது காண்க -டாக்டர்கன்னியப்பனின் 191969
கருத்திலே பூத்தது!! காண்க -டாக்டர்.கன்னியப்பனின் 191969 !!
கால்முளைத்தோ மிஞ்சினோம் காலனை? மஞ்சள்வான்
மேல்முளைத்த நீல மேகமே!நின் – கோலவிழி
காட்டும் படைப்புகளே, கைகொடுத் தென்னுயிரை
நீட்டும்! இதுவே நிசம்!
கயல்விழி யோரம் கடந்திடும் நேரம்;
புயல்வந்து தாக்கியே போக, – மயல்வந்து
வீழ்ந்தேன் ஒருகுழிக்குள்! வெந்தேன் உடலெல்லாம்!
ஆழ்ந்தேன்! திரும்பிவரேன் ஆம்!
வளர்னிலா நேரில் வரவுமே, வெள்ளி
கிளர்ந்தது நெஞ்சிலே! கேள்வி, – எழுந்ததாம்
ஊரினுள்! எம்மவர் ஊடினர்! பின்,என்ன
யாரினும் ஆனோம் இளைத்து!
நெஞ்சில் அவரின் நினைவெழும்ப, ஊரெலாம்
அஞ்சும் பழிச்சொல் அலரெழும்! – மஞ்சள்
உடல்களையும்; கண்கள் ஒளிகளையும்; பாசப்
படல்விளையும் மேனியெலாம் பார்!
========== =========