சிறகொடிந்த பறவை
சிறகொடிந்த பறவைகள்
இதோ பறந்து கொண்டிருக்கும்
நானே
உலகின் கடைசி
பறவையாகாலம்
இனி எந்த
புறாக்களை
பறக்கவிட்டு உங்கள்
சமாதானத்தை
உலகுக்கு சொல்வீர்?
உம்பிள்ளையுடன்
மழலை பேசிய கிளி
உம் வீட்டு வரவேற்பறை
ஒவியம் ஆகலாம்!!!
எந்த மயிலிறகை
உம் புத்தகதில்
வளர்ப்பீர் ?
இயற்கையுடன்
வாழ்ந்த எங்களை
உங்கள் அவசரபுத்தியால்
அழித்து விட்டிர்கள்
உங்கள் ஆறாம்அறிவு
ஆக்கம் என்று
அழிவை தானே தந்தது
எங்கள் எச்சத்தில்
முளைத்த மரங்களை
வெட்ட உனக்கு
யார்தந்தது அனுமதி?
அலைகோபுரம் உயர்த்தி
அலைவரிசை பெருக்கி
புள்ளினத்தை
பொசுக்கி வீட்டிர்கள்
யார் சொன்னது
எம்மை அஃறிணையென்றும்
உம்மை
உயர்திணையென்றும்
உங்கள் அறிவுபாதையில்
அழிவே மிச்சம்
உறைக்கவில்லை உனக்கு
இதோ
என் சிறகும் எரிக்கிறது
எப்போது வேண்டுமாயின் - நான்
மரித்து போகலாம்
இனியாவது
விழித்திடு மானிடா
இயற்கை இன்னும்
மிச்சமுள்ளது!!!!
பாண்டிய இளவல் மது. க