இரவின் திருஷ்டி
அவள் இரவெங்கும்
மூடாத,
என் ஜன்னல்கள்........
ஆளுக்கொரு
முனையில் நாங்கள்....
தொங்கு பாலம் நீள்கிறது
விரல்களாய்......
தலை
கலைந்தே கிடக்கிறாள்.....
மனம் கலைக்கும்
குறியீடு........
மையிருட்டில்
மையம்,
முகம் திருப்பினாள்
இரவின் திருஷ்டி பொட்டு.......
என் வானம்
பறந்தது,
அறுந்தது
அவள் பட்டம்.....
கவிஜி