ராசாவே
ஆயிரம்பேர் மத்தியில,
ஆர்பரிச்சு நின்னாலும்,
ஒத்த மனுசி இவ,
உனக்கான தேடலில !
சுத்தி வளமிருந்தும்,
சுகமில்ல அகத்துக்கு !
வெட்கி தலைகுனிஞ்சு,
நிக்கறனே வாடிப்போய் !
செத்த இவ உசுர,
தாங்கிக்க நீ வாயேன் !
அச்சு அசலான,
சக்கரைக்கட்டியையா !
முத்தந்தரவல்ல முழு நெலவு,
ஒம் மொகந்தேன் !
விட்டுப்பிரிஞ்சாயே,
பஞ்சுல தீ பத்துதையா !
மெத்த கடங்காரி தானய்யா,
நா ஒனக்கு !
தொட்டுப்போனவனே,
நீயய்யா வாழ்வெனக்கு !