அது தான் காதலையா

பூவும் இதழ் விரிக்கும் நேரம்
சூரியன் மறைந்திருக்கும் காலம்
பெண்ணின் வெக்கம் உதிக்குமையா

வானம் கன்னம் சிவக்கும் நேரம்
நட்சத்திரம் ஜொலிஜொலிக்கும் மேகம்
வெண்ணிலவும் ஒளிரும்மையா

எனோடு அவளுக்கு சண்டை
அன்றோடு பேச்சு வார்த்தை இல்லை
அது காதல் போர்க்க்கலாமையா

ஒரு படுக்கையில் இரு உள்ளம்
இரண்டுக்கும் இடைவெளியோ அதிகம்
உடல் மட்டும் தவிக்குதையா

பாதி விடிந்திருக்கும் பொழுது
அவள் ஆடை கலந்திருக்கும் அழகு
அதை என்னவென்று சொல்வதையா

புள் நுனியும் பணியிலாட
பனித்துளியும் கரைத்தே போக
வெப்பம் என்னை மட்டும் வாட்டுதையா

எனோட அவள் பேசாத நேரம்
என் விழி தெளித்த கண்ணீரும்
அவள் கண்கள் அறியுமையா

ஒரே வீட்டில் என்னைத் தேடி அவளும்
அவளைத் தேடி நானும்
அழைந்த சுகமான காலமையா

எனக்கு பரிமாற அவளும் மறந்ததில்லை
அவளை ரசிக்காமல் நானும் இருந்ததில்லை
மௌனமான காதலையா

மணிக்கணக்கில் அவளை நான் யோசிக்க
மனதோடு என் பெயரை அவள் சுவாசிக்க
இரு மனமும் நெருங்குதையா

இருவரும் அறியாமல் ஒருநாள்
இணைந்தோமே அந்நாள் திருநாள்
அது தான் காதலையா!!!!!!!!!!!!!

எழுதியவர் : (4-May-14, 10:52 pm)
பார்வை : 64

மேலே