கடந்து செல்பவளே

பனித்துளியே ...
பகலவனைப் பார்த்ததும்
பரவசமடைவது
நீ மட்டுமா ?
காலைக் கதிரவனின்
கதிர்வீச்சினைப் போல்
கண்களின் வீச்சினால்
கணக்கில்லா மின்சாரத்தை
என்னுள் ...
பாய்ச்சி செல்கிறாளே
பதுமையவளும்தான்..
ஒரு பார்வைதனை
பாய்ச்சிவிட்டு
ஓராயிரம் பாசைகளை
பரிமாறிக் கொள்கிறாளே
பாவையவளும்தான் ..
விழிகள்
பேசும் விபரங்கள்
எந்த மொழிகளுக்கும்
புரிவதில்லை ..
மொழிகள்
பேசும் பொழுது
விழிகளோ
விடைகொடுப்பதில்லை..
கண்பார்வைவீசிவிட்டு
காணமல் போகிறாளே
மயக்கும் மாலைகதிரவனோ
இவள் மறைவது
மறுபடியும்
காலையில்
கடைக்கண் வீசவோ ?