thozhikku

அன்பு தோழிக்கு
அன்பு செலுத்தவும்
அன்பை பெறவும்
வேண்டும் ஒரு மனம்
அழுகையில் கண்ணீர் துடைக்கும் விரல்களாகவும்
ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ளும் நல்ல மனமாகவும்
வாழ்கையில் மனம் தளரும்போது தோள் கொடுக்கவும்
தடுக்கி வீழ்ந்தாலும் கை கொட்டி சிரிக்காமல் கை தூக்கிவிடும் கரங்களாகவும்
மனதை குத்தி கிழித்து ரணமாக்கும் கொடுரமான வார்த்தைகள் பேசாமல்
மயில் இறகால் வருடும் இதமான வார்த்தைகள் சொல்லும் இதழ்களாகவும்
உயிர் பிரிந்தபோதும் ஆன்மாவுடம் கலந்த அன்பான ஆன்ம வேண்டும்

எழுதியவர் : S .M கௌரி (3-Mar-11, 12:56 pm)
பார்வை : 789

மேலே