எப்பவுமே வித்யா இப்படிதாங்க-வித்யா

எப்பவுமே வித்யா இப்படிதாங்க-வித்யா

ஒருவேலை இவ்வாழ்க்கையில்
எந்த கட்டுப்பாடும் இல்லாதிருந்தால்......
எண்ணங்களின் வேகத்தையும் தாண்டி
மைல் கற்கள் தாண்டி
காலத்தை ஊடுருவி
இரும்புக்கதவுகளை தகர்த்தெறிந்து
ஓடிக்கொண்டிருந்திருப்பேன்..........!

என் பாதங்கள்
நடக்க மறந்திருக்கும்
நிற்காமல் ஓடுவதற்கான
நிறுத்தங்கள் வழியெங்கிலும் வைக்கப்பட்டிருந்திருக்கும்.......................!

பிடித்தவைகள் எல்லாம்
மிக அருகிலும்...
பிடிக்காதவைகள் எல்லாம்
மிக தூரத்திலும் இருந்திருக்கும்..............!

வெறுப்புகள் குறைந்து
விருப்புகள் அதிகரித்திருக்கும்
விருப்புகளும் குறைந்து
சலிப்புகள் அதிகரித்திருக்கும்...................!

வரலாறுகளெல்லாம்
என் சிந்தைனைகளால்
வடிவம் பெற்றிருக்கும்...............................!

யூகங்கள் எல்லாம்
தீர்மானங்கள் ஆகியிருக்கும்
முடிவு என்ற வார்த்தை
அகராதியில் தொலைந்திருக்கும்............!

எதையோ தேடிக்கொண்டே
அலைந்திருப்பேன்............!

உலகின் பிறப்பு
விதியே என் பிறப்பிலும்
கையாளப்பட்டிருக்கும்.......
முடிவிலா சுதந்திரங்கள்
கூட ஏனோ வேண்டாம்
என்று தோன்றுகிறது இன்றெனக்கு........!



"நானே திறந்து வைத்த கட்டுப்பாடில்லா கதவுகளை மூடிவைப்பதற்குள்.......... வித்யா..... என்ன பண்ற....? gate சாத்திட்டு வீட்டுக்குள்ள வா........!


இதோ....வந்துட்டேன்மா.........!

எழுதியவர் : வித்யா (8-May-14, 4:41 pm)
பார்வை : 123

மேலே