கண்ணு கலங்குதம்மா
சித்திரை வெய்யிலிலே
சாவுக்கும் வாழ்வுக்கும்
போராடும் வேதனையை
மறக்காத நேரத்திலே
அடிச்ச காத்தாலே
அடிசாஞ்ச
வாழையெல்லாம்
அழவச்ச நேரத்திலே
விளஞ்ச நெல்லெல்லாம்
வாராத நீரால
பதராகிக் கருகி
வயிரெறிஞ்ச நேரத்திலே
கல்லு நெஞ்சங்கள்
கரையாத போதும்
அக்னியே வந்தாலும்
காத்தருள வந்தவளே!
கொட்டித் தீர்த்ததிலே—உன்
கருணை தெரிந்ததம்மா
ஊரெல்லாம் அணைத்ததிலே
உன் பாசம் புரிந்ததம்மா!
தாயே மாரியம்மா
உனைவிட்டா யாரம்மா
நினைச்சு பார்க்கையிலே
கண்ணு கலங்குதம்மா!.