காரியக் கார கண்ணாடி
ஒற்றை காகித
உயிர் தனிலே-நாம்
காரிய காரனாய் வாழும்
இரட்டை பக்கங்கள்..,
>>>>>>>>>>>>>>>>>>>>
நடிப்பது இதயமா-நாம்
வாழும் சமூகமா என
நிர்ணயிப்பதர்க்குள்
நிராகரித்து விடுகிறது
நாட்கள்..,
>>>>>>>>>>>>>>>>>>>>
தேடிக் கொண்டே இருக்கும்
கண்களுக்கும்,
அதை நோக்கி
ஓடிக்கொண்டே இருக்கும்
கால்களுக்குள்ளும்,
நிற்காத ஒன்று பேராசை!
>>>>>>>>>>>>>>>>>>>>>
அவதூறு பேசுவதை சொல்லியே
அவதூறு பேசித் திரியும்
அர்த்த மற்ற பக்கங்கள்
அதில் எல்லாம் குற்றங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>
நான் என்றும், நாம் என்றும்,
அவன் என்றும், அவர்கள் என்றும்,
புகழ்பாடியும், வசைபாடியும்
புறந்தள்ளும் ஒரு கூட்டம்!
>>>>>>>>>>>>>>>>>>>>
ஒதுக்கப்பட்டவன் என்றும்
தகுதியற்றவன் என்றும்
தரம் தாழ்த்திக் கொள்கிறான்
இந்த வாழ பிறந்த மனிதன்!
>>>>>>>>>>>>>>>>>>>>
முரண்பாடினை முகத்திலும்
இனத்திலும் காட்டிக் கொள்ளும்
இம்மனிதன் இனைந்தா விடுவான்
மனிதம் எனும் கூட்டினிலே?
>>>>>>>>>>>>>>>>>>>>
ஆதாயம் தேடி அலையும்
அரிதாரம் பூசித் திரியும்
அதிகார கூட்டம் இவம்
ஆளும் வர்க்கம் இவன்!
>>>>>>>>>>>>>>>>>>>>
வெற்றியை படிக்கெட்டு என்பான்
ஏணியில் ஏறவும் மறுப்பான்
எறியவனை ஏற்கவும் மறுப்பான்
என்ன உலகமடா இது?
>>>>>>>>>>>>>>>>>>>>
நல்லதோ கேட்டதோ
குற்றமோ நஷ்டமோ
எதுவானாலும் நமக்கென்ன என
வாழத் தெரிந்த நடிகன் இவன்!
>>>>>>>>>>>>>>>>>>>>
கேட்பதற்கும் பார்பதற்கும்
இரண்டேனினும்
கேட்பதும் பார்ப்பதும்
ஒன்றென்பதால் என்னவோ
இருமுகம் மறைத்து வாழும்
ஒருமுகக் காரன் இவன்
ஒரு போதும் மாறத் துணியாத
மாயன் இவன் மனிதன் இவன்..,
>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும், இவன்
கால ஓட்டத்தில்
ஒரு சேர பயணிப்பதாய்
ஒரே இனமாய் வாழ்வதாய்
காட்டிக் கொண்டாலும்
காட்டிக் கொடுத்தது விடுகிறது
காரியக் கார கண்ணாடி!