ஜன்னலோரம்

எல்லா பேருந்துகளிலும்
ஏதேனும் ஒரு
ஜன்னலோர இருக்கையில்
தலைசாய்த்து கதை
பேசிக் கொண்டிருக்கிறது
ஒரு காதல்!

எதிர்காற்றில் கலையும்
உனது முடியினை
சரிசெய்யாமல் இயல்பாக
பேசுகையில் தான்
இன்னும் அழகாக
கலைக்கிறாய் இதயத்தை!

நீ
தலைசாய்த்திருந்த
ஜன்னல் கம்பிகளுக்கு
எல்லாம்
பிடித்திருக்கிறது
காதல் துரு!

மழை பெய்கிறதா என
நீ கை நீட்டி
பார்க்கையில் தான்
நீ கை நீட்டுகிறாயா என
தொட்டுப் பார்க்கிறது
காதல் மழை!

எல்லா வழியனுப்புதலின்
போதும் மெதுவாக
நகரத் துவங்குகிறது
முடிவற்ற
தொடர் காதல்;
உன் கைபிடித்து!

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (12-May-14, 12:29 pm)
Tanglish : jannaloram
பார்வை : 396

மேலே