விதி

வாழ்க்கை எமதெனும் போதும்
வாழ்வது நீ காட்டும் வெளிச்சத்தில் தான். .

நேசத்தை காட்டி நேர்மையை நொருக்கிடும்
நெளிவு சுளிவுகள் கற்றவன் நீ. .

இருட்டினில் இதயம் பதைபதைக்க விட்டுபின்
இரவென்றால் பகல் உண்டென இலக்கணம் சொல்வாய். . .

அழகெல்லாம் முன் அடுக்கி ஆசை தந்து
அடைவதற்கு வழியடைத்து அழவும் செய்வாய். . .

தூரத்தில் துயிலை துரத்திவிட்டாய்
துன்பத்தை கண்களில் தூவுகின்றாய். .

காலம் கலைத்துக்
குலவிடும் இக்கூத்தினிலே. .

எள்ளலும் இகழ்ச்சியும் தாங்கிட
இரும்பினும் இருகிய இதயமுண்டு. .

துயரம் எல்லாம் தூக்கிசுமக்க
தோழமை தந்த தோள் உண்டு. . .

எத்தனையோ ஏமாற்றம் பெற்றும்
எழுந்திடும் துணிவை இழந்திடவில்லை. . .

பித்தர்போல் உன்னையே பின்தொடர்ந்தோம்
உன் பாதை முடிகையில் பிணங்கலானோம் . .

எனை எத்தனை முறை எரித்தாலும்
ஏற்றிடுவேன் என் விதியே. .

எரிந்து முடித்த ஈமக்கரியில்
உனை மாற்றி எழுதிட முனைதிடுவேன். . .

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (12-May-14, 5:46 pm)
Tanglish : vidhi
பார்வை : 91

மேலே