ஊடல் - 2
இமைகள் சேர்கையில் தூக்கம் வரும்,
ஆனால், பிரியும்போதோ பார்வை தரும்;
காதல் சேர்கையில் இன்பம் பெருகும்,
ஆனால் காதலில் ஊடலோ, அந்தக்காதலைப் பெருக்கும்.
அந்த இமைகள் போல சேர்ந்தே இருக்கவா
இல்லை பிரிந்தும் சேர்ந்தும் இன்பம் பெருக்கவா?
காதலில் ஊடல் ஒரு புரியாத புதிர்தான்,
ஆனால், ஊடலில் காதல் என்றும் பிரியாத உயிர்தான்.