பிணங்களை பற்றி கவலை இல்லை
அன்பும் கருணையும்
நன்றியும் விசுவாசமும்
இல்லாத மனிதர்கள்
நடமாடும் பிணங்கள் ........
எண்ணிக்கையில் வேண்டுமானால்
இவர்கள் மனிதரென்றிடலாம்
மனித இலக்கணத்தில்
நடமாடும் பிணங்கள் ........
செய்நன்றி மறந்துவிட்டு
செய்த தவறுக்கு
நியாயம்தேடி அலையும்
பொய் உருவங்கள் .........
கருணையை மறந்து
கல்லாய் வாழுந்து
அடுத்தவரின் நலனை கொன்று
அநியாயமாய் வாழ்பவர்கள் ........
உதவிகளை பெற்றுக்கொண்டு
உதாசீனம் செய்கின்ற
உள்ளமில்லா மனிதர்கள்
மிருக விசுவாசிகள் ........
பணத்திற்காக பாசத்தை
விலைபேசி விற்றவர்களை
வீணாக மனிதரோடு
சேர்ப்பதுதான் பாவம் ......
பூபூத்தால் வாசம்போங்கும்
ஆனால் இவர்கள் வாய்திறந்தால்
நாற்றம் பொங்கும்
காரணம் பிணம்தானே ........
மான்தோலை போற்றிக்கொண்டால்
புலி மானாகிவிடுமா-
கீறலிட்ட உருவங்களால்
நகத்தை மறைக்க முடியாது ........
இறந்துவிட்ட பிறகுவரும்
சப ஊர்வலத்தை
இவர்கள் வாழும்போதே
பார்கிறேன் ......
புதைத்துவிட்ட பிறகுதான்
பிணமில்லை இவர்கள்
வாழும்போதுகூட
நடமாடும் பிணங்கள்தான் ......
இவர்களின் அகோரப்பசிக்கு இரையாகும்
மனித மனங்களின்
குமுறல்களை இவர்கள்
எப்படி உணருவார்கள் ...........
உதட்டில் ஒன்றும்
உள்ளத்தில் ஒன்றும் வைத்து
நாடக வாழ்க்கைக்கு
அவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் ..........
நிறம் மாறும் பச்சொந்திபோல்
குணம்மாறும் இவர்களை எல்லாம்
பிணங்களின் கூட்டணியில்
வேண்டுமானால் ஒன்று சேர்க்கலாம் .......
பொய்மையே பேசி
உண்மையை மறந்துபோன
இவர்கள் எல்லாம் பூமியில் வாழ
தகுதியற்றவர்கள் .........
காகிதத்தின் மீதுள்ள காதலின் பேரிலே
கள்வர்களாய் போய்விட்ட
இவர்களை திருத்த எப்படி முடியும்
ஆகையால் ,
பிணங்களை பற்றி கவலை இல்லை ........