உறவை விட நட்பு மேலானது

கடமைக்காக உறவென்று
கடல்போல உறவு எதற்கு
உண்மையான உறவாக
ஒரே ஒரு நண்பன் போதும் .......

வேஷத்தை போட்டுகொண்டு
வேடிக்கை காட்டிக்கொண்டு
உள்ளத்திலே பகைவைத்து
உறவாடும் உறவைகாட்டிலும் .......

கிடைத்ததை பற்றிக்கொண்டு
நிலைமையை மாற்றிடும்
நிரந்தரமில்லாத நாடக
உறவுகளை காட்டிலும் .....

சுயநலத்தை சொந்தமாக
பிறர்நலத்தை பகையாக கொள்ளும்
வேஷக்கார பாசக்காரர்களை
காட்டிலும் ..........

அங்குசத்தை பிடிங்குகொண்டு
கோமணத்தை பரிசளிக்கும்
கூட்டு களவாணிகள்
குடும்ப உறுப்பினர்களை காட்டிலும் ........

நட்பு மேலானது
நடிக்க தெரியாதது
நாடகங்கள் புரியாதது
நல்லவற்றை மறுக்காதது .........

கிளைமாறும் குரங்கைப்போல்
நிலைமாறும் உறவுகளிடத்தில்
ஒருநாளும் நியாத்தை
எதிர்ப்பார்க்க முடியாது ..........

பாசத்தால் இருக்கும் பற்றினைவிட பணத்துக்காகத்தான் பற்றிருக்கும்
உறவுகளின் உரசல்களில்
உடம்பும் உள்ளமும் ரணமானதுதான் உண்மை ...

கடல்நீர் கரிக்குமென்று
உண்மையை யாராலும் மறுக்கமுடியுமா
உறவுகளும் அப்படித்தான்
நம்பியவர்களுக்கு கண்ணீர்தான் சொத்து .....

ஆலமரத்தின் விழுதுகளுக்கு இருக்கும்
விசுவாசம் கூட
மனித உறவுகளிடத்தில்
மடிந்து போய்விட்டது .........

என்ன செய்வது
காலத்தின் கட்டளையில்
உறவுகள் தோற்று
நட்பு மேலோங்குகிறது .........

உயிர்கொடுப்பான் நண்பனின்று
ஆனால் உயிர் எடுக்கிறது உறவு
சொத்துக்காகவும்
சுகத்துக்காகவும் .........

ஏமாற்றி வாழ்வதையே
லட்சியமாய் கொள்ளும்
உறவுகளால் ஓர்நாளும்
உண்மையாய் இருக்கமுடியாது .......

வரவுக்காக இருக்கும்
உறவுகளை காட்டிலும்
வசந்தத்திற்க்காக மலரும்
நடப்பு மேலானது .......


நட்பு வாழ்க !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-May-14, 12:48 pm)
பார்வை : 223

மேலே