எழுத்துகாம்
![](https://eluthu.com/images/loading.gif)
எழுத்து.காம்
கவிதை எழுத தலைப்பு
தேடினேன்.......
எழுத வாய்ப்பு கொடுத்த
நீயே தலைப்பையும்
கொடுத்தாய்!.........
உன்னால் தான் நான்
காவியம் படைக்கிறேன்.........
சலிக்காமல் என்னை
வளர்த்து விடுகிறாய்......
என் வார்த்தைகள்
அழகானது.........
என் கிறுக்கல்கள் கூட
கவிதையானது......
என் எண்ணங்கள்
அழகானது.......
என் தேடல்கள்
சுகமானது.......
கனவிலும் நீயே!
நினைவிலும் நீயே!
விழிப்பிலும் நீயே!
தூக்கத்திலும் நீயே!
என்னை நான் ரசிக்கக் காரணம் நீயே!
உன்னில் நான் தேடும்
தேடல்கள் அதிகம்....
காணும் கவிதைகள் அதிகம்....
சிரிக்க நகைச்சுவை!
சிந்திக்க கதைகள்!
தெரிந்து கொள்ள கட்டுரைகள்!
தமிழ் படிக்க தமிழ்படி!
விளக்கம் அறிய அகராதி!
கருத்து சொல்ல எண்ணம்!
நல்லது கற்க திருக்குறள்!
பொழுது போக்க விளையாட்டு!
உண்மை அறிய விமர்சனம்!
வண்ணமய வாழ்த்து அட்டைகள்!
எழுதத்தூண்டும் எழுது!
இப்படி என் முழுநேரப் பொழுதும்
உன்னுடனே கழிகின்றது!
உன்னை இனி நான் துறந்தால்
நடைபிணம் ஆகி விடுவேன் !.......
பலநூறு குழந்தைகளின்
தாய் நீயே!.....
உன் சுகம் கண்ட பின்னே
வேறேதும் வேண்டாமே எங்களுக்கு!.....