உயிரிலே கலந்தவளே 555

என்னவளே...

உன் கரங்களால்
நீரூற்ற...

பூ செடிதான் என்ன
தவம் செய்தது...

உன் கூந்தலில்
குடியேற...

பூக்கள் என்ன
தவம் செய்தது...

உன் கணுக்காலில்
குடியேற...

தங்க கொலுசுதான்
என்ன தவம் செய்தது...

உன் விரல்கள் பட
உன் எழுதுகோல் தான்...

என்ன தவம்
செய்தது...

நீ கைகளில் ஏந்தி
முத்தமிட...

அந்த மழலை என்ன
தவம் செய்தது...

என் உயிரிலே
கலந்தவளே...

சொல்லடி கண்ணே...

உன்னவனாக உன் மனதில்
நான் இருக்க...

நான் என்ன தவம்
செய்ய வேண்டும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-May-14, 9:22 pm)
பார்வை : 269

மேலே