பிரியாவிடை -கல்லூரிக்காலம்

பள்ளி புத்தகம் சுமந்த முதுகுகள் .....
காலத்தின் கட்டாயம் ,ஏதோ ஒரு நம்பிக்கை ,
வாழ்கையின் அடுத்த படி .......
படங்களில் மட்டுமே பார்த்த கல்லுரி இன்று என் வாழ்வில் ,எத்தனை ஆனந்தம் ,சிறு பதற்றம் .
புன்னகையோடு கைகுலுக்கிய அனைவரும் என் நண்பர்கள் ...
இது நட்போடு மட்டும் முடியாது என்று எனக்கு தெரியும்
அலட்சியமாய் தெரிந்த ஆங்கிலமும் அறிவியலும் இங்கு தன கோர முகத்தை காட்டின
இதில் எனக்கு என்ன தெரியும் ..கற்று கொடுக்க வந்த ஆசிரியர்கள் ........
கையில் கம்போடு வந்த ஆசிரியர்கள் மத்தியில்
வெறும் கையெடுடன் வந்தவர்கள் என் வயதை எனக்கு உணர்த்தினார்கள் .....
இருபினும் ஆசிரியர் கதாபதிரதிற்கு உரிய அனைத்து வேலைகளும் இங்கு நன்றாகவே நடந்தது
நட்பின் ஆட்டம் தொடங்கியது இங்குதான்.
யாருக்கு பிறந்த நாள் என்று தெரியாத அளவிற்கு வெட்டப்படும் கேக்குகள் அனைவரின் முகத்தையும் அலங்கரித்து ........
கல்வி சுற்றுலாவில் ஆடிய ஆட்டங்களும் ,எடுத்த புகை படங்களும் என் வசந்த கால வரலாற்றின் உச்சம் .......
கட் அடித்து சென்ற தல படங்கள் ,
பிட் அடித்து மாட்டிகொண்ட தருணங்கள் .,
முழுமையாய் ஈடுபட்ட துறை செயல்பாடுகள் ,
கூட்டமாய் மாட்டிகொண்ட சில பல கேஸ் கள்
அத்தனையும் நடந்தது இங்குதானே ........
வசந்த காலத்தை தேடிவரும் பறவைகளாய் வந்தோம் ...
இன்று வசந்த காலம் முடிந்திற்று ...
தேர்வின் காலையில் ஆசானை மாறும் நண்பனுக்கும் ....
தெளிந்த நல்லறிவு புகட்டிய ஆசானுக்கும் கூறும் நன்றி உடனும் ..இவ்வேடந்தாங்கல் நினைவுகளுடனும் .பிறிகிறோம் -மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் .....
-பாலா