உன் வசீகரம் என்சொல்வேன் மாட்சிமையே - நிலைமண்டில ஆசிரியப்பா

வெள்ளி நிலவே! ஞாயிறின் பிரதி
பலிப்பாய் தண்ணொளி என்மீது வீசும்நீ
என்னிடம் சொல்லிவிடு எங்கிருந்து வருகிறாயே!
வெள்ளி நிலவே! மென்மையும் பதமுமான
உள்ளொளியால், உனது இனிய புன்னகையால்
ஒளிமய மாக்குகிறாய் எங்கள் இரவை!
வெள்ளி நிலவே! எங்கள் வாழ்வின்
பொன்னான இறுதித் தருணம் வரையில்
தப்பாமல் வரும்உண்மைத் தோழி நீயே!
வெள்ளி நிலவே! மேகமென்னும் நடன
அரங்கில் விருப்புடன் நான்காணும் உன்சுழற்சி
அளிக்கும் வசீகரம் என்சொல்வேன்? மாட்சிமையே!
வெள்ளி நிலவே! என்னருமைக் காதலி
இருக்குமிடம் விண்ணிலா மண்ணிலா காணவே
கண்கொண்டு காத்திருக்கும் நானவளைக் காண்பதெங்கே?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-14, 9:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 111

மேலே