சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள் !

இருகண்கள் கனவு காண
இருள் எழுதிய இயற்கை தேர்வில்
பத்து விரலோ படிப்பை பார்க்க
பகுத்தறிவில் வெற்றியை உணர்ந்து
திறமையோ தீயை பிடிக்க
தீட்டினால் விலகிய இருளில்
மை மட்டும் மனதினால் எடுத்து
மாற்றத்தை சாதனையில் துவைத்து
இந்திய ஆட்சி பணித்துறையில்
இமாயலய பெருமையாய் உயர்கிறாய் !
உலகத்தை நீ பார்க்க வேண்டாம் ?
உன்னைத்தான் உலகம் பார்க்க வேண்டும் !
தன் தாய் கூறிய சொற்கள்,
தவறாமல் நிகழ்த்திய அருமையாய் !
கல்விக்கும் கண்தானம் படைத்தாய் !
காணட்டும் வரலாறு இது போல் !





எழுதியவர் : . ' .கவி (5-Mar-11, 5:10 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 354

மேலே