+கனவென்ன நினைவென்ன+

கனவுகளே கனவுகளே
மனிதனவன் நினைவுகளே
நினைவுகளே நினைவுகளே
நினைப்பவனின் கனவுகளே
கனவுகள் கலைந்துவிடும் நினைவுகள்
நினைவுகள் கலையாத கனவுகள்
கனவுகள் சில நினைக்க முடியாதவை
நினைவுகள் சில கலைக்க முடியாதவை
நினைவுகளை கலைக்க நினைத்து படுப்பவன்
கனவுகளால் கலைக்கப்பட்டு எழுவான்
கனவுகளை கண்டு மகிழ நினைப்பவன்
நினைவுகளால் நிலைக்கப்பட்டு விழுவான்
கனவுகள் மனவறை விருப்பம்
நினைவுகள் கலங்கரை விளக்கம்...

குறிப்பு: மீள்பதிவு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (16-May-14, 8:11 am)
பார்வை : 263

மேலே