எமை விட்டுப் பிரிந்த அன்பு
புது மலர் கொண்ட மணம் போல்
உன் மன அன்பு மணக்கட்டும்
சீ...என்னும் வார்த்தைதனை
உன் மனம் வெறுக்கட்டும்
அனைத்திடுவார் உள்ளம் போல்
அன்பு மழை பொழியட்டும்
சினம் கொண்டு மொழிவதனை
அகமிருந்து ஒதுக்கட்டும்
மழலை முகம் பார்த்தது போல்
கனிந்து உளம் உருகட்டும்
கடிந்து வன் சொற் பேசுவதை
களைந்தே மனம் உவக்கட்டும்
உடன் பிறந்தார் பாசம் போல்
மற்றவரும் இருக்கட்டும்
வெறுத்து பிறர் ஒதுக்கும் வதை
நமை விட்டு ஒழியட்டும்
இணை பிரியா நண்பர் போல்
அன்போடு இருக்கட்டும்
ஈனச் செயலதனை
எழுந்திடாமல் இருக்கட்டும்
அகிலத்தில் எது பெரிதென்றிட்டால்
அன்பென்ற மூன்றெழுத்துச் சொல்லென்பார்
அது எங்கே என்றென்று தேடிட்டால்
அவணியெங்கும் காண முடியாதென்பார்
விட்டவர்கள் தேடிப் பெற்றிட்டால்
தொல்லை பல ஓடி ஒழிந்து விடும்
தொலை தூரமது நமை விட்டுச் செல்லவில்லை
பிடித்திடலாம் அன்பதனை வென்றிடலாம்!!
வாரீர்..வாரீர்..வாரீர்!!!