டீச்சரைப் பார்த்ததும் கவிதை

குழந்தையின் சிரிப்போ
செம்பருத்திப் பூ சிரிப்பூ.
*
திருவிழாவுக்குப் போய்
சிரித்து வந்தார்கள் குழந்தைகள்.
*
எப்பொழுதும் குழந்தைகளோடு
துணையிருக்கிறாள் பாட்டி.
*
ஓட்டலில் டீச்சரைப் பார்த்ததும்
மெல்ல சிரித்தது குழந்தை.
*
பாய்ந்துப் போய்ப் பிடித்தது குழந்தை
பஸ்ஸில் சன்னலோரம் சீட்.

எழுதியவர் : ந.க.துறைவன் (17-May-14, 9:03 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 130

மேலே