என் பாக்கள் நட்பு வெண்பாக்கள்

தன்னலம் பேணா தயாள இதயமுடன்
துன்பமெனில் கண்ணீர் துடைத்திடும் - அன்பாகேள்
ஆழ்கடலில் மூழ்கினாலும் மூச்சுத் திணறுமுன்
வாழ்வில் கரைசேர்க்கும் நட்பு .

தட்டிக் கொடுக்கும் தடுமாறி நிற்கையில்
குட்டிக் களையும் குறைகண்டால் ! -நட்பே
இனியது பாரில் அறியாயோ ? என்றும்
புனிதமாய் போற்றியே வாழ் .

சோர்ந்தாலும் தோள்கொடுப்பான் சோகத்தில் பங்கெடுப்பான்
சார்ந்துபடர் கொம்பாவான் நம்பிடில் !-பார்மிசை
நட்பில்லா நெஞ்சம் வறண்ட களர்நிலமே
நட்டால் வளருமோ கூறு !


( முயற்சி +பயிற்சி )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-May-14, 12:23 am)
பார்வை : 246

மேலே