எதிர்பார்ப்பேன் நிச்சயமாய்

எதிர்பார்க்காதே
இதை என்னிடம்
எதிர்பார்க்காதே
எதிர்பார்ப்பு இல்லாமல்
எதையும் பார்க்க முடியாது
இது எதார்த்தம்

ஒவ்வொரு இரவும்
பகலை எதிர்பார்த்தே
விடிகிறது
முடியாமல் போயிருந்தால்
இரவு முடிந்திருக்காது
இருள் இருந்திருக்கும்
நான் முடியாமல் இருக்க வேண்டாமா?
முடியாது என்று ஏன் முடக்குகிறாய்

வண்டுகளை எதிர்பார்த்தே
தண்டுகள் பூச்சூடுகின்றன
கண்டு கொள்
கொண்டு செல்ல எதுவும் இல்லை
தந்து போக எது தான் இல்லை
எதிர்பார்ப்புகளை எடுத்து தந்து பார்
கொடுத்து பெறும் சுகம்
தடுத்து வாழ்வதில் இல்லை

மண்ணை எதிர்பார்த்தே
கண்ணை மூடுகிறது விதை
விண்ணை எதிர்பார்த்தே
விழுந்து கிடக்கிறது அதன் கதை
விட்டுக் கொடுக்காமல் போனால்
மொட்டுக்கள் ஏது?
பட்டுகள் தான் ஏது?
நான் பட்டுப் போவேன் - இப்படியே
இதை விட்டு வைக்காதே

எதை கேட்டுவிட்டேன்
உன்னிடம் இல்லாத
எதையோ ஒன்றையா?
விதைகளை பார்த்துத் தானே
இந்த விளை நிலத்தை
விதைக்கத் தந்தேன் - நீ
புதுக் கதைகள் கட்டுகிறாயே

புதுக் கவிகளுக்கு
ஜென்மம் தர
நமக்கு ஒரு ஜென்மம் தான்
வாய்த்திருக்கிறது
எண்ணம் திறக்க - உன்
எண்ணம் திறந்து வா

எழுதியவர் : Raymond (20-May-14, 3:51 am)
பார்வை : 169

மேலே