நிலம் வாட, நிலவும் வாட

வணங்கும் சிவனே வடிகாலாக
காலன் வரினும் மனம் ஆடாமல்
கருத்துத் தெளிவான அகப் பார்வைக்கு
கை எடுத்துக் கும்பிடுவேன்...

வாடின சிரிப்பும் வதங்கின சிந்தனையும்
வந்தவர்க்கும் போனவர்க்கும் புதிதல்ல -
வடிகட்டி எஞ்சி மிஞ்சின சக்தியிலும்
வானில் பறக்க இறக்கையை விரிக்கிறேன்...

எழுதியவர் : ஆதி (21-May-14, 8:44 pm)
சேர்த்தது : aadhee
பார்வை : 55

மேலே