வேண்ட வேண்டும்

நம் நினைவின் நல்லவைகள் நடக்க வேண்டும்!
நடப்பது எல்லாம். நல்லதாய் இருக்க வேண்டும்!
நாம் சொல்வதை அனைவரும் ஏற்க வேண்டும்!
ஏற்பதாய் நம் சொல் அமைய வேண்டும்!
பொழுது இனிய எளிதான வேலை வேண்டும்!
வேலையினால் புகழ் பணமும் சேர வேண்டும்!
நல்ல மன நண்பர் வேண்டும்!
நண்பர் எல்லாம் நல்லவராய் மாற வேண்டும்!
கண் இனிய காதல் மன பெண்கள் வேண்டும்!
பெண்கள் மதிக்கும் பெரும்+ ஆளாய் தோற்றம் வேண்டும்!
மனை ஆளும் மதி பெற்ற மனைவி வேண்டும்!
மனைவி மனம் கோணாத செய்கை வேண்டும்!
தள்ளாத வயதினிலும் வலிமை வேண்டும்!
வலிமை உள்ள மனம் கொண்டு முதுமையை வெல்ல வேண்டும்!
எல்லாம் உள்ள பூலோகை உள் வாங்கி உவப்பதாலெ!
வேண்டியது கிடைக்கும் வேண்ட வேண்டவே!!!!