சொல்ல நினைத்தது

எழுதத்தான் நினைக்கிறேன்
ஏழ்மையையும் ஏமாற்றத்தையும்
பதியத்தான் நினைகிறேன்
பகுத்தறிவையும் பசியையும்

சொன்னதில் சொல்ல நினைத்த சொல்
விரலை விஞ்சிய விதைதனோ?
எழுதாத கவிதைகள் ஏக்கத்துடன் பல இருக்க
எழுத்தத்துடித்தும் ஏனோ எட்டாமல் போனது
இந்த சமுதாயமும் அதன் சமத்துவமும்

காகிதத்தின் வார்த்தைகளை விடுத்து
கரங்களால் கோர்வை செய்வோம்
எழுச்சியின் ஏணியில் எழுதுவோம், இதுதான்
எங்கள் புதிய பாரதம் என்று...

எழுதியவர் : மயில்வாகனன் (23-May-14, 8:50 pm)
சேர்த்தது : மயில்வாகனன்
Tanglish : solla ninaiththathu
பார்வை : 147

மேலே