காதலும் காத்திருப்பும்

விடிய விடிய வாசித்தும்
விளங்கவில்லை!
அவள் என்ன கன்னித்தீவா?
இல்லை கற்பனை
ஓவியமா?
எப்படிப் பார்த்தாலும்
அப்படித்தான் தோன்றுகிறது!
ஒரு வேளை
கார்மேகமாயிருக்குமோ?
அவளை நினைத்தால்
மழையும் பொழிகிறது!
வேறெங்குமில்லை
என் கண்களில் தான்!
என்னை பிரிய எத்தனை
காசுகள் லஞ்சம் வான்கியிருப்பாளோ?
வஞ்சனை செய்து விட்டாள்.
வருந்திக் கொண்டிருக்கிறேன்.
அவள் வருகையை
எதிர்பார்த்தவண்ணம் ....!

எழுதியவர் : Antonysam (23-May-14, 2:39 pm)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 200

மேலே