நீ ரசித்த முட்கள் 555
நண்பா...
முட்கள் இல்லாத
பூக்களை கண்டு...
மனம் மயங்குவதைவிட...
முட்கள் இருக்கும்
பூக்களையும் ரசித்துப்பார்...
உன் திறமை
உனக்கு புரியும்...
காற்று கூட நீ
இருக்கும் போதே...
உன் புத்தகத்தின் பக்கங்களை
புரட்டி பார்க்கிறது...
மற்றவர்களை கண்டு
நீ அச்சம் கொள்ளாதே...
உன்னால் முடியாதது
ஒன்றும் இல்லை...
முடியும்வரை
முயற்சிசெய்...
நீ ரசித்த முட்களும்
நாளை பூக்களாக மலரும்...
உன்னை தூற்றிய பலரும்
போற்றுவார்கள்...
வெற்றி உனக்காக
காத்திருகிறது...
நீ செல்.....