தற்கொலை
வாழ்க்கை எனும்
பெரிய வளையத்தில்
வாழ துணிவற்று
சிறிய வளையத்தில்
தலையை நுழைத்து
தற்கொலையை
நாடும் மனிதர்கள் ======
தற்கொலை எண்ணம்
ஏன்? ஏன்? ஏன்?
குற்ற உணர்வுகளுடன்
கூடிய வலிகளால் ஆ ?
சினத்தின் சீரிய
தாக்கத்தினாள் ஆ ?
இயலாமை எனும்
இரும்பான
பிடியில் சிக்கியதாளா ?
ஏமாற்றங்களின்
ஏளனமா ?
உதாசீனத்தின்
உச்ச கட்டத்தினாளா ?
பணம்
படுத்தும் பாட்டினாளா ?
உளவியல் ரீதியாய்
அதிக உணர்ச்சி வசப்படும்
கதா பாத்திரமாய் மாறியதாளா ?
மரணத்தின் மேல் உள்ள
ஆழ்ந்த காதலினாலா ?
தற்கொலை
ஒரு வினாடியின்
உந்துதல் ====
மன நிலை
சம சீராய்
சமன் படாததால் ===
தொட்டால்
சினுங்கியாய்
சுருங்குவதால் ====
தற்கொலை
எண்ணத்தை
தற்கொலை செய்து
வாழத்தான்
படைக்கப்பட்டுளோம்
என வாழ்வின்
இன்னல்களை
அனுபவங்களாய் ஏற்று
தனி மனித சுதந்த்திரத்தொடு
தன்னம்பிக்கையுடன்
சவால்களை
சாதனைகளை மாற்றி
வாழ்வில்
முத்திரை பதிப்போம் =========