வரலாறு தோற்கட்டும்

அடிமையினத்திற்காக தன் வாழ்வையிழந்த
லிங்கனை மிஞ்சும் உயிர்-பூமியில்
இங்கு தோன்றவேண்டும் இன்று
உழைக்கும்மக்கள் நலனே நாட்டின் உயர்வென்றுணர்ந்த
மார்க்ஸ் போல் மனிதன் மீண்டும்
இங்கு தோன்றவேண்டும் இன்று
மார்க்ஸ் எண்ணமதனை உண்மையாக்கிய
லெனினை விஞ்சும் இன்னொருயிர்
இங்கு தோன்றவேண்டும் இன்று
புதிய பொருளாதாரம் தந்து தன் தேசவரலாற்றை
உலகே வியக்கவைத்த ஸ்டாலின்
இங்கு தோன்றவேண்டும் இன்று
நட்பென்பதற்கு இலக்கணம் தந்த
எங்கல்ஸ் போல் இன்றுள்ளோரில்
ஓருயிர் தோன்றவேண்டும் இங்கு
உலகமெல்லாம் ஓர் குடும்பமாக வாழ்வோமே
என்றுரைத்த காஸ்ட்ரோ இப் பூமியில்
மரணமடையாதிருக்கவேண்டும் இங்கு
மனித உயிரின் பிரச்சனையெல்லாம் எனக்குரியதே
என்றுவாழ்ந்த சேகுவாரா போல் ஒருவன்
மீண்டும் தோன்றவேண்டும் இங்கு
ஒன்றுபட்டால் உலகே வியக்கும் -செயலதனை
நம்மால் செய்யவைக்க முடியும் என்றுணர்த்திய
ஹோசிமின் இங்கு தோன்ற வேண்டும்,
மனசாட்சியால் மனிதன் நொறுங்க வேண்டும்
என்ற தத்துவ்ம்ரைத்த காந்தி போல்
மனிதன் இங்கு மீண்டும் தோன்றவேண்டும்
உலகசரித்திரமுரைத்து நன்மை எங்குண்டென்றாலும்
அதை நாடு என்றுரைத்த நேரு போல் மனிதன்
இங்கு தோன்றவேண்டும் இன்று
ஏழை ஏதுரைத்தாலும் நம்புவான் என்று அவனை
ஏமாற்றினால் அழிக்கப்படுவீர் என்றுரைத்த
மாவோ மீண்டும் வேண்டுமிங்கு இன்று
விடுதலை உணர்வை தன் உயிர் ஈந்துதான்
உணர்த்தவேண்டுமெனில் மரணிக்க வயது ஓர்
தடையல்ல என்றுணர்த்திய பகத்சிங்
மீண்டும் வேண்டும் இங்கு
பிணமான பின்னும் எதிரியை குலைநடுங்கச்செய்த
ஆசாத் போல் மீண்டும் ஓருயிர்
தோன்றவேண்டும் இங்கு
ஒன்றும் செய்யாமல் எமனுக்கு மாயும்
வெறும் வேடிக்கை மனிதனில்லை இவன் என்றுரைத்த பாரதி என்னால் தோற்கடிக்கப்படவேண்டும்
வாழ்நாள் முழுதும் துன்பமுறும் மனிதனுக்காகவே
வாழ்ந்தான் இவன் என்று நான் மரணமுறும்
போது என் பிணம் முன்பு கூறுங்கள்
என்றுரைத்த மார்டின் லூதர் போல்
மற்றோர் உயிர் இங்கு வேண்டும் இன்று
தவறான பாதையில் சென்றாலும் அதுணர்ந்தபின்பு
பிறப்பின் மாண்புணர்ந்து பின் இதற்காக
உயிரையும் தரலாம் என்று வாழ்ந்து மறைந்த
மல்கம் எக்ஸ் மீண்டும் வேண்டும் இங்கு
இறக்கும் வரையில் மனித நலனுக்காக
இயற்கையை தோண்டிய ஐன்ஸ்டின் போல்
மனிதன் மீண்டும் வேண்டும் இங்கு
முறையான கல்வியில் இல்லை மகத்துவம்
மனித முயற்சியின் முன் கல்வியும் தோற்கும்
என்று மின்பயன் உணர காரணவாதியான
பாரடே மீண்டும் வேண்டும் இங்கு
பெண்மையால் முடியும் எதுவும் என்று
வாழ்ந்து மறைந்த மேரிகியுரி போல்
வேண்டும் பெண்மை இங்கு இன்று
அவமானம் முன்னேற்றத்திற்கு தடையல்ல
என்றுணர்ந்து அதை நொறுக்கி வென்ற
ரைட் சகோதரர்கள் மீண்டும் வேண்டுமிங்கு
அனைவரும் இங்கு ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்
கொண்டிருக்கிறோம் என்று இடித்துரைத்த
Dr .ராதாகிருஸ்ணன் மீண்டும் வேண்டும் இங்கு
எனது 30 கோடி மனிதனையும் நான் எங்கனம் மாற்ற
என்று வருந்திய தாகூர் போல் மனிதன்
இங்கு தோன்றவேண்டும் இன்று
இழிவை நீக்க வாழ்வை தானம் செய்யலாம்
என்று வாழ்ந்து காட்டிய மண்டேலா
மீண்டும் வேண்டும் இங்கு
உலகம் என் தேசம்,அதற்கு பணிசெய்வதே
என்மதம் என்றுரைத்த டாம்பெயின்
மீண்டும் வேண்டும் இங்கு
வேண்டும், வேண்டும், வேண்டும்,இங்கு
வரலாறாய் வாழ்ந்து மறைந்த மனிதரெல்லாம்
தோற்கும் மானிடப் பிறப்பிங்கு வேண்டும்
வேண்டும்,வேண்டும், மீண்டும் இங்கு

எழுதியவர் : பாபுபகத் (25-May-14, 11:49 am)
பார்வை : 141

மேலே